வெள்ள நீரில் குளிக்க சென்ற சிறுவர்கள் மரணம் . இந்தியாவின் வட மாநில கனமழையால் யமுனா நதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைநகர் டெல்லி வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் தற்போது வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நேரத்தில் தெருவெங்கும் நீர் நிரம்பி காணப்படுவதனால் நீரில் குளித்து விளையாட சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர் இதனால் குழந்தைகளை அவதானமாக பார்க்க அரசு எச்சரிப்பதுடன் இந்த மரணம் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்ட உள்ளது.