இந்தியா – ஆந்திர பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட உலகிலே மிகச் சிறிய சலவை இயந்திரம், கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்த மிகச் சிறிய சலவை இயந்திரத்தை, சாய் திருமலநீதி (Sai Tirumalaneedi) என்பவர் உருவாக்கியுள்ளார்.
சலவை இயந்திரத்தின் நீளம் 37 மில்லிமீட்டர் ஆகும்.
அகலம் 41 மில்லிமீட்டர் ஆகும்.
உயரம் 43 மில்லிமீட்டர் ஆகும்.
https://www.tiktok.com/@guinnessworldrecords/video/7337818414414712097
இந்தச் சாதனை குறித்த வீடியோவை, கின்னஸ் உலகச் சாதனை அமைப்பின் Instagram பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில், சாய் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, சிறிய துணி ஒன்றைத் துவைக்கப் போடுவதைக் காண முடிகிறது.
இந்த வீடியோ பார்ப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.