மேற்கு இலண்டனில் எட்டு வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று GMT நேரப்படி சுமார் 18:20 மணியளவில், சவுத்ஹாலில் உள்ள கிங் ஸ்ட்ரீட்டில் நடந்த விபத்து குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
அத்துடன், சிறுவன் அசசர உதவி அம்பியுலன்ஸ் சேவையால் சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி 21:47 மணிக்கு உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் லொறி மற்றம் சாரதி நிறுத்தப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், விபத்தை கண்ட சாட்சிகள் முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.