இந்த வார இறுதியில் இலண்டனில் நடக்கும் பாலஸ்தீன சார்பு பேரணியின் போது, அவர்களை சமாளிக்கும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான அதிகாரிகளை ஈடுபடுத்த பொலிஸார் தயாராகி உள்ளனர்.
சனிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஹைட் பார்க்கில் இருந்து எல்ம்ஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாக செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகரில் அண்மைய பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை சமாளிக்க நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய லண்டனில் பாலஸ்தீன ஒற்றுமை பிரசார ஆர்ப்பாட்டம், மத்திய கிழக்கின் நெருக்கடி தொடர்பான, இந்த ஆண்டின் ஐந்தாவது பெரிய அணிவகுப்பாக இருக்கும் என, டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.