வெஸ்ட்மின்ஸ்டரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது 40 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர், அத்துடன், மூன்று அதிகாரிகள் காயமடைந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்தார்.
கூட்டம் முடிவடைந்த பிறகு, பொது ஒழுங்குச் சட்டத்தை மீறி, அங்கு தங்கியிருந்த சுமார் 500 பேர் கொண்ட குழுவுடன் அதிகாரிகள் பேசியதாக பெருநகர காவல் சேவை கூறுகிறது.
இதன்போது, பொலிஸார் பலரை கைது செய்தனர். ஆனால், ‘கூட்டத்தில் இருந்த சிலர் எதிர்ப்பு வெளியிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன்போது, போத்தலால் தாக்கப்பட்டதில் ஒருவர் ‘முகத்தில் பலத்த காயம்’ அடைந்தார்.
“பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சாரம் மற்றும் பிற குழுக்கள் உள்ளிட்ட ஒரு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஒரு போராட்டம், மாலை 6 மணி முதல் வைட்ஹாலில் நடந்தது. பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் இரவு 8 மணிக்கு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
“8,000 முதல் 10,000 பேர் வரை கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், தேவையான நேரத்தில் எந்த அசம்பாவிதமும் இன்றி வெளியேறினர். இருப்பினும் சுமார் 500 பேர் கொண்ட குழு ஒயிட்ஹாலில் தங்கி, நிபந்தனைகளை மீறி தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தது” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.