வேல்ஸில் சுற்றுலா வரி அறிமுகப்படுத்தப்பட்டால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாடசாலை பயணங்களைத் தவறவிடுவார்கள் என்று அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
“முகாம்கள் மற்றும் இரவில் தங்குதல் போன்ற வாழ்க்கையை மாற்றும் அனுபவத்தை” இளைஞர்கள் இழக்க நேரிடும் என்று சாரணர் சைம்ரு கூறுகின்றார்.
இங்கிலாந்து முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு குடியிருப்புப் படிப்புகளை நடத்தும் ஒரு நிலையம், ஒரு பிள்ளைக்கு ஒரு இரவுக்கு 75p என்ற வரி சிலருக்கு கட்டுப்படியாகாது என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், வேல்ஸ் அரசாங்கம், “தீர்மானத்தைப் பயன்படுத்துவதற்கு நியாயமான, நேரடியான அணுகுமுறையை” எடுத்ததாக தெரிவித்துள்ளது.
1979 முதல் இங்கிலாந்தில் இருந்து மாணவர்களை மையத்திற்கு அழைத்து வரும் ஓர் ஆசிரியர், கூடுதல் செலவுகளைத் தவிர்க்க சில பாடசாலைகள் வேல்ஸுக்குச் செல்ல அஞ்சியதாக கூறியுள்ளார்.
புதிய வரி முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டால், ஹோட்டல்கள், தங்குமிடங்களில் உள்ள விருந்தினர்கள் 2027 முதல் £1.25 இரவு வரி செலுத்த வேண்டும். அத்துடன், தங்கும் விடுதிகள் மற்றும் முகாம்களுக்கு 75p என்ற குறைந்த கட்டணம் அறவிடப்படும்.
அத்துடன், உள்ளூர் அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் கட்டணங்களை அறிமுகப்படுத்தலாமா என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.