மன்னார் மனித புதைகுழியின் மீட்பு பணிகளுக்கு நீதியமைச்சின் ஊடாக நிதி வழங்கப்படுகின்ற போதிலும் தொடர்ச்சியான மீட்பு பணிகளுக்கு நிதி பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் நிதிவழங்குவதாக அறிவித்துள்ளது.
அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டதரணி சாலிய பீரிஸ் இதனை எமது செய்தி சேவைக்கு சந்று முன்னர் தெரிவித்தார்.
மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
எனவே இந்த மீட்பு பணிகள் கைவிடப்படாது தொடர்ந்து முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில் காணாமல் போனோர் அலுவலகம் அதற்கான நிதியை மாதாந்தம் வழங்கும் என, அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.