தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடல் வழியாக கஞ்சா மற்றும் தங்கம் என்பன கடத்தப்பட்டுவதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் திடீர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அவர்கள் வசமிருந்த 6 மூடைகளில் இருந்து 192 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில், தமிழகத்தை சேர்ந்த 30 வயதான ஒருவரும், யாழ்ப்பாணம் மருதங்கேணியை சேர்ந்த 43 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடுடன் இந்த கடத்தலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் தமிழகத்தை சேர்ந்த மற்றுமொருவரும் தப்பிச்சென்றுள்ள நிலையில், அவர்கள் தொடர்பான விசாரணைகளை தமிழக காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.