வடக்கு கிழக்கில் இருந்து முகாம்களை அகற்றும் நடவடிக்கை என பிழையாக சித்தரிப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் பொது நிகழ்வில் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் ஒரு போதும் அகற்றப்படாது.
தற்போது இராணுவத்தின் குழுக்களை ஒருங்கிணைப்பு செய்யும் நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. இந்த மறுசீரமைப்பு அனைத்து படை பிரிவிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது இராணுவத்திற்கு மாத்திரமே புரிகின்ற விடயமாகும். இதனையே சில குழுக்கள் இராணுவ குறைப்பு என்றும் முகாம்கள் அகற்றப்படுதல் என்றும் பிழையாக தகவல் பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் தொடர்ச்சியான மீளாய்வுகள் மூலம் பொது மக்களுக்கு விடுவிக்கப்படக் கூடிய காணிகளை அடையாளம் கண்டு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.