கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றம்.
புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை, ஒல்கொட் மாவத்தை வீதியின் இரு பக்க போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
அத்துடன் அப்பகுதியில் பகுதியில் பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துமாறு கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் புகையிர நிலையத்தில் பல்வேறு சோதங்களை ஏற்படுத்தியுள்ளததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமைச்சரவை கூட்டத்தில் புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தீர்மானம் நிதி அமைச்சரினால் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவே புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தகது.