புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 100 மில்லியன் ரூபா புகையிரத திணைக்களத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று பிற்பகல் கூடிய தொழிற்சங்க நிறைவேற்று குழு கூட்டத்தின் போது புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று மாலை முதல் சில புகையிரத சேவைகள் இடம்பெறும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதன்படி இன்று மாலை வெயாங்கொட முதல் மொறட்டுவ வரையிலான புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் நாளை காலை 6.35 மணியளவில் கண்டியிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி புகையிரதம் ஒன்று பயணிக்கவுள்ளது.
மேலும் மாத்தறையிலிருந்து பயணிக்கும் ருஹுனு குமாரி புகையிரதம் வழமையான நேரத்தில் சேவையில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.