முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் கடற்படையினரும் பொலீசாரும் ஈடுபடவேண்டும் என்று கடற்தொழில் அமைச்சர் கடந்த 12 ஆம் திகதி முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டபோது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாயாற்று கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் நடத்திய கடல் சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் (வெளிச்சாம் பாச்சி,மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள்) ஈடுபட்ட 8 படகுகளும் அதில் இருந்த 27 கடற்தொழிலாளர்களையும் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களின் படகுகள் மற்றும் தொழில் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் கடற்படையினரால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணக்ளம் பிணையில் விடுதலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த படகுகள் புத்தளம் சிலாபம் திருகோணமலை முல்லைத்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவை என அறியமுடிகிறது