இலங்கையில் உள்ள ஒன்பது மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலான கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று (23) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
24.08.2018 நாளை இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தல் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பிலான விவாதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை 11 மணி முதல் மாலை 6 வரையில் இதற்கான விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.
குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் புதிய முறையில் மாகாண தேர்தல் நடத்தப்படும்.
அவ்வாறு இல்லாவிடின் பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு குறித்த அறிக்கை சமர்பிக்கப்படும்.
குறித்த குழு இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் ஜனாதிபதியினால் தேர்தல் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.