வன்னியின் இறுதி மன்னன் மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது ஆண்டு வெற்றி நினைவு நாள் நிகழ்வு 25.08.2018இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கற்சிலைமடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது
முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவற்கழக தலைவர் இசந்திரரூபன் (தம்பியன்) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழரசுக்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
முன்னதாக கற்சிலைமடு சந்தியிலிருந்து பாரம்பரிய கலை அம்சங்களோடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகம் வரை கலாச்சார பவனி இடம்பெற்று பேரணி பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தை அடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற வன்னியின் இறுதி மன்னன் மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழரசுக்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மாகாணசபை விவசாய அமைச்சர் க சிவநேசன் மாகாண சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி இடம்பெற்றதை தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன
நிகழ்வில் தமிழரசுக்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மாகாணசபை விவசாய அமைச்சர் க சிவநேசன் மாகாண சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்
(சண்முகம் தவசீலன்)