0
கிளிநொச்சி விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில், ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
காலை 10 மணியளவில், விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்விற்கு, முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்டத்தின் தலைசிறந்த கணித ஆசிரியரும், விஞ்ஞானக்கல்வி நிலையத்தின் ஸ்தாபகருமான திரு. எட்வர்ட் மரியதாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் திரு.மாரிமுத்து தெய்வேந்திரன் (ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சு வடமாகாணம்), ஓய்வுபெற்ற கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் திரு.மகாலிங்கம் பத்மநாதன், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் மகாலிங்கம் பத்மநாபன், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திருமதி விஜி சுரேஷ் மற்றும் விஞ்ஞானக்கல்வி நிலையத்தின் இயக்குனரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.