ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக இன்று உயர்நிதிமன்றத்தை நாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகியுள்ளது.
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று உயர்நிதிமன்றத்தை நாடவுள்ளன.
அரசியலமைப்பு, பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநாயகத்தை மீறி, ஜனாதிபதி செயற்பட்டுள்ளதாக குறித்து கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
அத்துடன் அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.