கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாதிரி வாக்களிப்பு……

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று மாதிரி வாக்களிப்பு இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலக வளாகத்தில் குறித்த மாதிரி வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பான செயற்திட்டம் முன்னெடு்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்புாது மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்க ஊழியர்கள் மாதிரி வாக்களிப்பு முறை தொடர்பான குறித்த செயற்திட்டத்தில் பங்கு கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலதிகஅரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்,  தேர்தல் உத்தியோகத்தர்கள், பொலிசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆசிரியர்