கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வார கால விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும அறிவித்துள்ளார்.
அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தரம் 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கே எதிர்வரும் 27ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எனினும் ராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகள் நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.