பெண் போராளிக்கு வீட்டு திட்டம்.

யாழ் வல்லிபுர பகுதியில் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட எல்.டி.டி.ஈ பயங்கரவாத அமைப்பின் மாலதி படைப் பிரிவின் முன்னாள் போராளிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் புதிய வீடு நிர்மானிப்பதற்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் நன்கொடையாளரான திரு குமார வீரசூரியவின் நன்கொடை நிதியுதவியுடன் இந்த வீட்டு நிர்மான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முன்னாள் பெண் போராளியான திருமதி சிவரஞ்சன் நந்தனிக்கு வசிப்பதற்கு வீடின்மையினை அவதானித்து இவருக்கு உதவும் முகமாக இராணுவத்தினரால் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டன.

55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேஹொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் 551 ஆவது படைத் தலைமையகத்தின் கண்காணிப்பின் கீழ் 16 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் இந்த வீடு அமைப்பதற்கான நிர்மான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இம் மாதம் (20) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மற்றும் நன்கொடையாளரான திரு குமார வீரசூரியவின் பங்களிப்புடன் இந்த புதிய வீடு அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ அதிகாரிகள் , படையினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆசிரியர்