பொலிஸாருக்கு தகவல் வழங்கும் மக்களுக்கான சன்மானத் தொகை அதிகரிப்பு

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேகநபர்களை கைதுசெய்யும் பொலிஸாருக்கும் இவை குறித்து தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கும் வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “ரி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்படால் தகவலை வழங்கியவருக்கும் கைதுசெய்த பொலிஸாருக்கும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும்.

ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் தகவலை வழங்கியவருக்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

ரி பீட்டர் ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தகவல் வழங்கியவருக்கும் 50 ஆயிரம் ரூபாயும் துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் இருவருக்கும் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைதுப்பாக்கியுடன் சந்தேகநபரைக் கைதுசெய்யும் பொலிஸாருக்கு 25 ஆயிரம் ரூபாயும் தகவல் வழங்குபவருக்கு 15ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படும். அத்துடன், துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபரை கைதுசெய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும்  தகவல் வழங்குபவருக்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பணம் வழங்கப்படும்.

துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்படும் போது பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் தகவலை வழங்கியவருக்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தன்னியக்க துப்பாக்கியுடன் சந்தேகநபரை கைதுசெய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் தகவல் வழங்குபவருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் வழங்கப்படும். துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோத்தருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் தகவல் வழங்குபவருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வேறு வகையான துப்பாக்கியுடன் சந்தேகநபரை கைதுசெய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தகவலை வழங்கியவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் இருவருக்குமே 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 15 ஆயிரம் ரூபாயும் தகவல் வழங்கியவருக்கு 10ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதுடன் துப்பாக்கி மாத்திரம் கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தகவல் வழங்கியவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

வெளிநாட்டியில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரை கைது செய்யும் பொலிஸாருக்கும் தகவல் வழங்குபவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கைக்குண்டு மாத்திரம் கைப்பற்றப்படும் போது இருவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்