செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தால் கைதுகள் தொடரும்!

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தால் கைதுகள் தொடரும்!

0 minutes read

எதிர்க்காலத்திலும் எவரேனும் போராட்டங்களை மேற்கொண்டாலும், பொலிஸார் அவர்களை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “தொற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளாலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதே ஒழிய பொலிஸாரினால் அல்ல.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணத்தினால் தான், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பொலிஸார் தங்களின் கடமையையே மேற்கொண்டார்கள். எதிர்க்காலத்திலும் எவரேனும் போராட்டங்களை மேற்கொண்டால், பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவார்கள்.

இதில் நாம் எப்போதும் சமரசங்களை செய்துக் கொள்ளப்போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.