March 26, 2023 11:03 am

இலங்கைக்கு வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அனுமதி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தீவிர நிலைமையிலுள்ள கொரோனா நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை வாராந்தம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன்படி நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சமர்ப்பித்த யோசனைக்கே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பரவிவரும் திரிபடைந்த வைரஸ் காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், போதுமானளவு ஒட்சிசனை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு இயலுமான வகையில் வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்காக யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்