உரப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

உரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த விடயம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், இளம் குற்றவாளிகள் தொடர்பான திருத்தச்சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதன் மூலம், முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்த 18க்கும் குறைந்த வயதெல்லையானது 18 முதல் 22 வயதுவரை என திருத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றில் இன்றும் நாளையும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்கு முற்பகல் 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணிநேர காலம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்