May 28, 2023 6:16 pm

458 கிலோ கஞ்சா நெடுந்தீவுக் கடலில் சிக்கியது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோகிராம் கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர் அதில் எடுத்துச் சென்ற 458 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர்.

இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த இரண்டு படகோட்டிகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மண்டைதீவைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர் நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்