ரணில் விக்ரமசிங்கவின் கன்னி வரவு செலவு திட்டம் நேற்று 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
டிசம்பர் 8 ஆம் திகதிவரை விவாதம் இடம்பெறும்.மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அமைச்சரவை பல முடிவுகளை அறிவித்தது அதில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும்.
நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் தங்களது கட்டணத்தை 50% குறைக்கும்.நாட்டின் நிலைமையில் மிகவும் முக்கியமே இல்லாத முடிவுகளில் இதுவும் ஒன்றாக மக்களால் விமர்சிக்க படுகிறது.