“அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகைமை எனக்கு இல்லை. எனினும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
மீண்டும் நாடாளுமன்றம் பிரவேசிக்க முடியாமல் போனமைக்கு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிகளையும் பாராட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.