செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதமர் பதவியை மஹிந்த ஏற்க நாட்குறித்தார் ஜோதிடர்!

பிரதமர் பதவியை மஹிந்த ஏற்க நாட்குறித்தார் ஜோதிடர்!

0 minutes read

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க எதிர்வரும் மே 7 ஆம் திகதியே பொருத்தமானது என்று நாட்குறித்துள்ளார் அவரின் ஆஸ்தான ஜோதிடர்.

இந்தச் செய்தியைத் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

மேற்படி செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

என்னதான் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டாலும் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை மஹிந்த ராஜபக்ச இன்னும் கைவிடவில்லை.

பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் அவரது ஆஸ்தான ஜோதிடரிடம் அண்மையில் ஆலோசனை கேட்டுள்ளார் மஹிந்த.

“எதிர்வரும் மே 7 ஆம் திகதியே பொருத்தமானது. அன்றைய தினமே பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் அரசியலில் உங்களுக்குத் தொடர் வெற்றி கிட்டும்” – என்று கூறியுள்ளார் அந்த ஜோதிடர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More