June 5, 2023 10:35 am

ஜனக ரத்நாயக்க பதவி நீக்கம்! – தீர்மானம் நிறைவேற்றம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்று விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று காலை முதல் இடம்பெற்ற நிலையில், மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்