மின்சாரக் கம்பியில் சிக்கிக் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல, மலடோல பிரதேசத்தில் காட்டு யானைகளிடமிருந்து வயலைப் பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே குறித்த பெண் இன்று (16) காலை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹல்துமுல்ல, மலதோல, மெதகெதரவில் வசித்து வந்த 60 வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலாகே பொடிமணிகே என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
தனது வயலைப் பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியைத் தவறுதலாகத் தொட்டதில் குறித்த பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.