மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் வைத்தியசாலை கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
தெல்தெனிய வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பன்வில – கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ என்ற17 வயதுடைய சிறுவன் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவன், மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.