Thursday, February 22, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் | பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் | பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே

2 minutes read

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தனது உரையில் தெரிவித்துள்ளதாவது.

மனித உரிமை மீறல்களை சாத்தியமாக்கும் சட்டங்கள் குறித்தும் கரிசனைகள் காணப்படுகின்றன.பயங்கரவாத தடைச்சட்;டம் 1979 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது முதல் அரசியல் கைதிகளைநீண்ட காலம் தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.மிகமோசமான கறுப்புஜூலை கலவரத்தின் பின்னர் நிகழ்;ந்த வெலிக்கொடை படுகொலைகள் என அழைக்கப்படும் சிறைச்சாலை படுகொலையில் கொல்லப்பட்ட 53 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களே.

பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை கைதுசெய்யப்பயன்படுகின்றது அந்த சட்டம் தற்போது நீக்கப்படலாம் என்கின்ற போதிலும் புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மோசமானதாகயிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறை இன்னமும் மாற்றமடையவில்லை.இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளதுஇஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது.

மேலும் இது பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளையோ சர்வதேச தராதரங்களையோ பூர்த்தி செய்யாது.இலங்கையில் நல்லிணக்கம் குறித்து எனக்கு மேலதிக தெளிவுபடுத்தல்களை  வழங்கியமைக்காக பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்திற்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.

இலங்கை தூதரகத்தின் ஆவணத்தின் ஒரு பகுதி இவ்வாறு தெரிவிக்கின்றது நவம்பர் 2023 வரை காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் தேடும் பிரிவினர் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்டவர்களில் 16 பேரை உயிருடன் கண்டுபிடித்துள்ளனர் 3 பேர் உயிரிழந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர் என இலங்கை தூதரகம் தனது ஆவணத்தில்  தெரிவித்துள்ளது.

18000 தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக நம்பபடுகின்றது அப்படியானால்  ஏனையவர்களிற்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் அவர்கள் குறித்து தெரிவிப்பதற்கு என்ன ஆவணங்கள் உள்ளன?

ஐக்கியநாடுகளின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் இலங்கையின் சகா என்ற அடிப்படையிலும் பொறுப்புக்கூறல் நீதி மனித உரிமை பாதுகாப்பு போன்றவற்றிற்கான வேண்டுகோள்களிற்கு ஆதரவாக பிரிட்டன் அதிகளவில் செயற்படவேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும்சரியான எண்;ணிக்கை தெரியவில்லை ஆனால் ஐக்கிய நாடுகள் குழு 40000 தமிழர்கள் உட்பட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மோதல்களின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.

இறுதியாக தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான சவேந்திரசில்வா மற்றும் இலங்கையின் ஏனைய குற்றவாளிகளுக்கு எதிராக பிரிட்டன் உட்பட உலக நாடுகள் தடைகளை விதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.பாரிய அநீதிகளில் ஈடுபட்டவர்கள் பிரிட்டனிற்குள் வரஅனுமதிக்கப்படமாட்டார்கள் என  காண்பிப்பதன் மூலம் பிரிட்டன் அமெரிக்கா கனடாவின் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கலாம்

 

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More