செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு – கிழக்கில் நாளை முதல் ஒரு வாரத்துக்குக் கனமழை!

வடக்கு – கிழக்கில் நாளை முதல் ஒரு வாரத்துக்குக் கனமழை!

1 minutes read

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே நாளை (15) காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது. இதனால் நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காற்றுச் சுழற்சி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. இதன் நகர்வுப் பாதை தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும்.

இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இக் கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

இம்மழை நாளை (15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.