செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் தந்தை பணம் கொடுக்காததால் உயிர்மாய்த்த 20 வயது மகன்!

யாழில் தந்தை பணம் கொடுக்காததால் உயிர்மாய்த்த 20 வயது மகன்!

0 minutes read

யாழ்ப்பாணத்தில் தந்தை பணம் கொடுக்காததால் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

செல்வச்சந்நிதி கோயில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் தந்தை ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில், இளைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில்வதற்காகத் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

தந்தை தனக்குப் பணம் கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்று (29) வெள்ளிக்கிழமை அந்த இளைஞர் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.