Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவை சந்தித்த 6 நாடுகளின் தூதுவர்கள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவை சந்தித்த 6 நாடுகளின் தூதுவர்கள்

1 minutes read

6 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பு இன்று புதன்கிழமை (06) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

பாலஸ்தீனத்தின் தூதுவர் Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி  R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர்  Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி  Dewi Gustina Tobing, ஆகியோரும் இந்திதோனேசிய தூதரகத்தின் பிரதம கொன்சல் Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர்  Badli Hisham Bin Adam  மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More