செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மைத்திரியின் பரபரப்பு கருத்து: உடன் விசாரணைக்குப் பணிப்பு!

மைத்திரியின் பரபரப்பு கருத்து: உடன் விசாரணைக்குப் பணிப்பு!

1 minutes read
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் தான் அறிந்துள்ளேன் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அத்துடன், நீதிமன்றத்தால் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அல்லது உத்தரவிடப்படுமாயின் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவதற்குத் தான் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ராஜபக்ஷ குடும்பத்தினரே நாட்டைப் பாரிய பிரச்சினைக்கு இட்டுச் சென்றது என்று சுட்டிக்காட்டிய மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

தனது ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினருக்கு எதிராகவே தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி நேற்றுமுன்தினம் கண்டியில் நடைபெற்ற மத நிகழ்வின்போது தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் தான் தகவலை வெளியிடும்போது அதனை மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டியது நீதிபதிகளின் பொறுப்பாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More