செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தாயகத்தை வலுப்படுத்தும் லண்டன் எடின்பிரோ மரதன் திருவிழா

தாயகத்தை வலுப்படுத்தும் லண்டன் எடின்பிரோ மரதன் திருவிழா

1 minutes read

புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் தாய்நிலத்தை வலுப்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பதற்கு லண்டன் எடின்பிரோ மரதன் திருவிழா தக்க சான்றாய் மூன்றாவது வருடமும் நிகழவிருக்கிறது. 

பிரித்தானியாவின் Scotland 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 பகுதியில் உள்ள Edinburgh என்னும் இடத்தில் ஒவ்வொரூ வருடமும் தமிழர்களின் மனங்களில் மறக்கமுடியா மாதமான மே மாதம் இறுதி விடுமுறை வார இறுதியில் நடைபெறும்எடின்பிரோ மரதன் திருவிழாவில்   ( Edinburgh Marathon Festival)  மூன்றாவது முறையாக இமுறையும் May 25 & 26 ம் திகதிகளில் Kilipeople charity அமைப்பும் JMFOA -UK ( யாழ்ப்பாணம் மருத்துவ பீட மருத்துவர்கள் சங்கம் – பிரித்தானியா ) உம் இம்முறையும் “ Say No to Drugs” மற்றும் “Go Green Globe ” ( தாயக்கத்திற்கான போதைபொருள் ஒழிப்பு மற்றும் உலக இயற்கையை பேணுதல் வீழ்ப்புணர்வுக்காக ) கலந்து கொள்கிறார்கள்.

இதில் சுமார் 35,000 மரதன் ஓட்ட வீரர்கள் சுமார் 400 தொண்டர் அமைப்புகளை பிரதிநித்துவ படுத்தி உலகெங்கும் இருந்து வந்து இம்முறை கலந்து கொள்கிறார்கள் , இதில் தமிழர்களை பிரதிநிததுவப்படுத்தும் முகமாக மேற்குறிப்பிட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களும் இம்முறையும் சுமார் 120 மரதன் ஓட்ட வீர வீராங்கனைகளுடன் களமிறங்க உள்ளது.

இம்முறை ஜெர்மன், பிரான்ஸ், கனடா,  ஆஸ்திரேலியா, தாயகம் ஆகிய இடங்களிலும் இருந்து எமது தமிழ் உறவுகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி …

இந்த EMF நடைபெறும் அதே நாளில் தாயக மண் எங்கும் விழிப்புணர்வு அடையாக EMF ஆனது தமிழ் பேசும் எமது 8 மாவட்டங்களுடன் மலையம் , தீவகம் ஆகியனவும் இணைந்து விழிப்புணர்வு குறுமரதன், தெருக்கூத்து, மரம் நடுதல், நெகிழி குப்பைகளை அகற்றுதல், வாய்கால்கள், குளங்களை, கடற்கரை ஓரங்களை துப்பரவு செய்தல் போன்ற இயற்கையை பேணும் சிரமதான வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

போதைப்பொருள் விழிப்புணர்வு வேலைகளிலும் எமது தாயக உறவுகள் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு கழகங்கள், ஊர்த்தளங்கள், கிராம அமைப்புகள், தொண்டர் அமைப்புகள் என்பனவற்றுடன் கைகோர்த்து உலகாளாவிய பெரும் சவாலாக தோன்றிவரும் போதைப்பொருள் ஒழிப்பு ( Say No To Drugs ) மற்றும் உலக பசுமை பேணல் ( Go Green Globe ) என்ற சர்வதேச பொது நோக்கத்திற்காக ஒரே நேர்கோட்டில் பயணிப்பது என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும் தருணமே.

மே மாதம் 25th & 26th இல் நடைபெறும் EMF 2024 இல் இலவசமாக இணைந்து கொள்ள உடன் தொடர்புகொள்ளுங்கள் –
Mr. Thuraivan – 07799 064825
Dr. Navaneetham- 07762 247068
Dr. Mathi – 07543620416

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More