ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மற்றும் இனவாத கொள்கைகளை உடைய அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியமைக்கு கிடைத்த வெற்றி என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மற்றும் இனவாத கொள்கையுடைய அரசியல்வாதிகள் இந்த முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
பொதுத் தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமையானது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றியாகும் அநுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
அநுரகுமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பதவிக்கான தெரிவு உடனடியாகவே ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமாரவிற்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர். மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கானவொரு சந்தர்ப்பத்தினை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தோல்வியை தவிர்ப்பதற்காக அரசியல்வாதிகளில் சிலர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர். எவ்வாறாயினும், மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றனர்.
அதற்கான ஆணையை அவர்கள் சரியானக முறையில் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு அதிகமாக உள்ளது என்றார்.