கொரோனா தொற்று; தனிமைப்படுத்தப்பட்டார் இடைக்கால அதிபர்….

தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபராக உள்ள ஜீனைன் அனெசுக்கு (Jeanine Anez) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆசிரியர்