99வயது மூதாட்டி விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 99வயது மூதாட்டி ஒருவர் விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ரோபினா அஸ்தி என்ற பெயர் கொண்ட மூதாட்டி கடந்த ஞாயிறன்று Riverside Municipal விமானநிலையத்தில் உள்ள நெக்ஸ்ட்ஜென் பிளைட் அகாடமியில் விமானம் பறப்பது தொடர்பான பாடத்தை விளக்கி கூறினார். தொடர்ந்து அவர் விமான ஓட்டியாகவும் வானில் பறந்தார்.

இதனை அடுத்து அவர் 99வயதில் விமான வகுப்பு எடுத்த மூதாட்டி மற்றும் விமானம் ஓட்டியவர் என்ற இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்தார். சாதனைகள் படைப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் இந்த மூதாட்டி..

ஆசிரியர்