செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாலூட்டும் தாய்மாரின் தேவைகள் தொடர்பில் உரிய கவனம்!

பாலூட்டும் தாய்மாரின் தேவைகள் தொடர்பில் உரிய கவனம்!

1 minutes read

ஹிருணிக்காவுக்கு நீதியமைச்சர் பாராட்டு

நீதிமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள குழந்தைகளுடன் வரும் தாய்மார்களின் தேவைகள் குறித்து தனது கவனத்தை செலுத்த காரணமாகவிருந்த, ஹிருணிகா பிரேமச்சந்திரவை நீதி அமைச்சர் அலி சப்ரி பாராட்டியுள்ளார். முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் எதிர்கொள்ளும் சிரமத்தை ஒப்புக்கொள்வதாகவும் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதிக்கு நீதிமன்ற கட்டமைப்பில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிக்கான அணுகலில் எந்தவிதமான பாகுபாடும் அல்லது தடையும் இல்லை என்பதை உறுதி செய்வதில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள நீதி அமைச்சர், மேலும் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான வசதிகளை அது வழங்குவதை உறுதிசெய்ய நீதி அமைச்சகம் செயல்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த பணிக்கு தான் உறுதிபூண்டுள்ளதாகவும், தற்போது நடந்து கொண்டிருக்கும் நீதி கட்டமைப்பு சீர்திருத்தங்களில் இதற்கு முன்னுரிமை வழங்கப்படுமென்றும் உறுதியளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் தெமட்டகொடையில் இளைஞரைக் கடத்திச் சென்றது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜராகததற்காக கொழும்பு உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. ஹிருணிகா பிரேமச்சந்திர பின்னர் அதற்கான விளக்கத்தை வெளியிட்டார்.

நீதிமன்றத்தால் வரவழைக்கப்பட்ட நேரத்தில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தான் இருந்ததாக தெரிவித்த அவர், தனது 01 மாத குழந்தைக்கு தனது வாகனத்திற்குள் இருந்தவாறு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் விளக்கமளித்திருந்தார். அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிறிது நேரத்திலேயே பிடியாணை இரத்து செய்யப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More