இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், கடந்த 9ம் தேதி 99 வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று வின்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.
கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதால் இறுதிச்சடங்கில் ராணி, உறவினர்கள் உள்பட 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராணி 2ம் எலிசபெத், அவரது மகனும் அடுத்த வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது 2வது மனைவி கமீலா, சார்லசின் மூத்த மகன் வில்லியம்ஸ், அவரது மனைவி கேத் மற்றும் அவர்களின் 3 குழந்தைகள் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வில்லியம்சின் சகோதரர் ஹாரியின் மனைவி மேகன் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்காவில் உள்ளார். எலிசபெத், பிலிப்பின் ஒரே மகளான இளவரசி ஆன்னி, அவரது கணவர் மற்றும் 2 பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.