3
கார்த்திகை மாதம் முதல் நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர்.
இந்நாளில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அடுத்து வரும் சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திரத்தன்று மாலை அணியலாம். அர்ச்சகர் அல்லது குருநாதரின் கையால் ருத்ராட்சமாலை அல்லது துளசிமணி மாலை அணிந்தபின் கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து வழிபட வேண்டும். பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசிக்க விரும்புவோர் கண்டிப்பாக 41 நாள் விரதமிருப்பது அவசியம்.