0
அம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கழிவு பரவலானது கரையோர மீனவர்களது மீன்பிடி தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுக்கின்றது.
ஆகவே இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.