நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கொட்டகலை பொரஸ்கிரிக் தோட்டத்தை சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் (வயது – 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் கனரக லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள- பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.