நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு சூடாக்கி, ஓரளவு ஆறவைத்து குழந்தையின் உடலில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது.பச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் முறைபச்சிளம் குழந்தையை குளிக்க வைப்பதற்கு இளம் தாய்மார்கள் தயங்குவார்கள். மென்மையான தசைகள் சூழ்ந்திருப்பதால் குழந்தையை கையாளும்போது ஏதேனும் பாதிப்பு நேர்ந்துவிடுமோ? என்ற கவலை அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். குழந்தையை எப்படி குளிக்க வைப்பது? எந்த நேரத்தில் குளிக்க வைப்பது? என்ற குழப்பமும் உண்டாகும்.
பருவ கால நிலையை பொறுத்து குழந்தையை குளிக்க வைக்கும் நேரத்தை தீர்மானிக்கலாம். குளிர் காலங்கள், மழை காலங்களில் 8 மணிக்கு முன்பாக குழந்தையை குளிப்பாட்டுவதை தவிர்க்க வேண்டும். வெயில் பரவ தொடங்கி குளிர் தன்மை குறைந்த பிறகு குளிப்பாட்டுவதே நல்லது. அதுபோல் வெப்பம் அதிகரிக்கும் கோடை காலங்களிலும், மிதமான வெப்பம் நிலவும் காலங்களிலும் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குளிப்பாட்டலாம்.
குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன்பு ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குளிப்பதற்கு முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது என்பார்கள். குழந்தைக்கும் இது பொருந்தும். தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தையை குளிக்க வைக்கக்கூடாது. குழந்தையை குளிப்பாட்டிய பிறகு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.
குழந்தையின் உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு குளிப்பாட்டுவதும் அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு சூடாக்கி, ஓரளவு ஆறவைத்து குழந்தையின் உடலில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது. ஓரிரு நாட்கள் இடைவெளியில் எண்ணெய் மசாஜ் செய்து வரலாம்.
குழந்தையை தினமும் குளிப்பாட்டுவதுதான் நல்லது. ஏனெனில் குழந்தையின் உடலில் தோல் உரிந்து புதிய தோல் உருவாகிக்கொண்டே இருக்கும். தினமும் குளிக்கவைத்து சருமத்தை தூய்மையாக பராமரித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
அதேவேளையில் குளிர் காலத்தில் சளி, இருமல் பிரச்சினை குழந்தைக்கும் ஏற்படக்கூடும் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பாட்டலாம். தண்ணீரை சூடாக்கி குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆறவைத்து குளிப்பாட்டி விடலாம்.
நன்றி : மாலைமலர்