பாட்டு கூட்டு அறிவிப்பினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
இதில், பரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயற்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன.
அதேபோன்று இந்த இலக்கை அடைய இருநாட்டிற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இருநாடும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு பரிஸில், உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸிலிருந்து 2 செல்சியஸ் வரை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என உலக தலைவர்கள் உறுதியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.