லிங்கா’ படத்தில் நடித்ததன் மூலம் ரஜினியிடம் நிறைய விஷயம் கற்றுக்கொண்டேன் என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.ரஜினியின் பாலிவுட் நண்பர் சத்ருகன் சின்ஹா. இவரது மகள் சோனாக்ஷி சின்ஹா. ‘லிங்கா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதில் நடிப்பதற்காக குதிரை ஏற்றம் பயிற்சி பெற்றார். கர்நாடகாவின் உட்புற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அங்கு சரியான தங்கும் வசதி இல்லை என்று சோனாக்ஷி வருத்தப்பட்டார். அதை வெளிப்படையாக தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். இது பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த தகவலை அவர் இணைய தள பக்கத்திலிருந்து நீக்கினார்.
படப்பிடிப்பு ஆரம்ப நாட்களில் அசவுகரியம்பற்றி பேசிய சோனாக்ஷி படப்பிடிப்பை நிறைவு செய்ததுபற்றி தற்போது தனது எண்ணத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் ‘லிங்கா படம் நடித்து முடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த ரஜினி சாருக்கும் படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பில் பணியாற்றிய நாட்கள் முழுவதையும் நன்றாக ரசித்தேன். மேலும் ரஜினி சாரிடமிருந்தும் பட குழுவினரிடமிருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.