வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுழன்று அடித்த காற்றில் வாகனங்கள் நிலை குழைந்தன.வீதிகளில் தேங்கிய நீரில் கார்கள் மூழ்கின.
புயல் கரையை கடக்கும் போது சூறைக்காற்றுடன் அதிகனமழை பெய்யக் கூடுமென அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.