2015 ஜூன் இல் மற்றவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை நிறுத்திவிட்டு தமங்கடுவையில் உள்ள மதுபானசாலை ஒன்றிற்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அவரது காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு நிறுவனங்களுக்கு 2.6 பில்லியன் மதிப்புள்ள வரி விலக்கு அளிக்கப்பட்டது என்றும் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு டெண்டர் கோராமல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அவருக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்றும் ரவி கருணாநாயக்க கூறினார்.
மைத்திரிபால பற்றிய விபரங்கள் அடங்கிய நான்கு கோப்புகள் தன்னிடம் உள்ளன என தெரிவித்த அவர், மற்றவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.
மேலும் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் மூலமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார் என்றும் அவர் கூறினார்.