தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதிக்கு தனது பதவிக்காலத்தை நீடிக்கும் தீர்மானமில்லை. நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார் .
நாங்கள் அடுத்த 3 வருடங்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவோம். எங்களுக்கு பதவி காலத்தை நீடிக்க எந்த அவசியமும் இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.